#Breaking: நடிகர் சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி செய்ய நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!
நிம்மதியே இல்லை.. சினிமாவை விட்டு விலக இதுதான் காரணமா?? மனம்திறந்த சிம்பு பட நடிகை!! ஷாக்கில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த சிலம்பாட்டம் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சனா கான். அவர் பயணம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் 'ஈ', 'அயோக்கியா' போன்ற படங்களில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடித்துள்ளார். மேலும் நடிகை சனா கான் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு போட்டியின் இறுதி வரை சென்றார்.
இவர் கடந்த 2020-ல் முஃப்தி அனஸ் சயத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அண்மையில் அவர் தான் சினிமாவிலிருந்து விலகியது குறித்தும், ஹிஜாப் அணிந்ததற்கான காரணம் குறித்தும் பேசியுள்ளார். அப்பொழுது அவர், எனது கடந்த காலத்தில் பெயர், புகழ், பணம் எல்லாம் இருந்தது. ஆனால் நிம்மதி இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையாக இருந்தது. அதனால்தான் சினிமாவை விட்டு விலகினேன்.
பின் ரமலான் நாளன்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் கல்லறையில் நான் இருப்பதை கண்டேன். அந்தக் கனவு, இதுதான் என் வாழ்க்கை, முடிவு என இறைவன் உணர்த்துவது போல இருந்தது. அதன்பின் ஏராளமான இஸ்லாமிய உரைகளைக் கேட்டேன். பின் மறுநாள் எனது பிறந்தநாளிலிருந்து ஹிஜாப் அணிய துவங்கினேன். இனி அதை ஒருபோதும் அகற்ற மாட்டேன். தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என கூறியுள்ளார்.