"நாப்கினுக்கு கூட வரி இருக்கு, பாதுகாப்பு எங்க?" - நடிகை சனம் செட்டி கொந்தளிப்பு.!



Actress Sanam Chetty Request to Investigation about Sexual Harassment on Cine Peoples 

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல் தொடர்பான விவகாரங்களை ஹேமா கமிட்டி அம்பலப்படுத்தியுள்ள நிலையில், அதேபோன்ற விசாரணை நடத்த தமிழ்நாட்டிலும் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என நடிகை சனம் செட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "பாலியல் தொல்லை குறித்து பலரும் அப்பவே சொல்லலாம் என கேட்பார்கள். என்னிடம் கேட்பவர்களை நான் செருப்பால் அடிப்பேன் என கூறி இருக்கிறேன். நான் தற்போது வரை நடித்த அனைத்து திரைப்படங்களும் சுத்தமான, பிரச்சனை இல்லாதது ஆகும். திரைத்துறையில் இதுதான் நடக்கிறது என்பதை கண்டறிந்த கேரள திரைப்பட கலைஞர்களுக்கு நன்றி. தமிழ் திரையுலகிலும் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருக்கிறது. 

செருப்பால அடிப்பேன் னு சொல்லுங்க

என்னிடம் படுக்கைக்கு கேட்பவர்களை நான் கண்டித்து அவர்களை அப்போதே துண்டித்துவிடுவேன். நான் அவர்களை நோக்கி செல்லவில்லை. சிலர் அதனை ஏற்கிறார்கள். வேறு வழியின்றி அவ்வாறு செய்பவர்கள், பாதிக்கப்பட்டு இருந்தால் இனியாவது அவர்கள் தங்களின் பாலியல் தொல்லை குறித்து புகார் அளியுங்கள். திறமைக்கு கிடைக்கும் வாய்ப்பை கைப்பற்றுங்கள். நான் அப்படித்தான் இருக்கிறேன். 

இதையும் படிங்க: படுக்கையை பகிர்ந்தால் படவாய்ப்பு - கேரள திரையுலகில் நடந்த கொடுமை.. ஹேமா கமிட்டி அறிக்கையில் பகீர்.!

Actress Sanam chetty

மலையாள திரையுலகில் நான் கண்ட நல்ல மனிதர்கள்

ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பாலியல் தொல்லையை எதிர்கொள்கிறார்கள். உங்களை படுக்கைக்கு அழைக்கும் படங்களை நிராகரியுங்கள். வாரத்திற்கு 2 முதல் 3 அழைப்புகள் இவ்வாறாக வருகின்றன. மலையாளத்தில் நான் 2 படத்தில் நடித்துள்ளேன். என்னை அவர்கள் மிகவும் நல்லபடியாக கவனித்துள்ளார்கள். எனக்கு அப்படியான நிலை நடக்கவில்லை. 

வரி இருக்கு, பாதுகாப்பு எங்க?

உங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை அங்கேயே, அப்போதே வெளிப்படுத்துங்கள். பெண்களிடம் ஒற்றுமை என்பது குறைவாக உள்ளது. பெண்கள் பெண்களுக்காக பேசுங்கள். ஆண்கள் நமக்கு பேசுவார்கள் என நினைக்க வேண்டாம். பிரச்சனைகள் உள்ளது, நமது உரிமைக்காக போராட வேண்டும். நாம் வாங்கும் சானிட்டரி நாப்கினுக்கு கூட வரிக்கட்டும் நிலையில், பாதுகாப்பு இல்லை என்றால் எப்படி?." என கூறினார்.

இதையும் படிங்க: படுக்கையை பகிர்ந்தால் படவாய்ப்பு - கேரள திரையுலகில் நடந்த கொடுமை.. ஹேமா கமிட்டி அறிக்கையில் பகீர்.!