#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படுக்கையை பகிர்ந்தால் படவாய்ப்பு - கேரள திரையுலகில் நடந்த கொடுமை.. ஹேமா கமிட்டி அறிக்கையில் பகீர்.!
பிராந்திய வாரியன திரையுலகில் முன்னணி நடிகைகளாக பணியாற்றுபவர்கள், நடிகைக்கான வாய்ப்பு தேடுவோரை குறிவைத்து முன்னணி நிலையில் இருக்கும் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு இடம் அளித்தால் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வழங்கப்படும் என மிரட்டி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தகவல் மீடூ விவகாரத்திற்கு பின் அம்பலமானது.
சமூகத்தில் உயரிய பொறுப்பில் இருந்த திரையுலக நட்சத்திரங்கள் மீதும் பகீர் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இதனிடையே, கேரளா மாநிலத்தில் நடிகைகளுக்கு நடக்கும் நேரடி / மறைமுக பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக விசாரிக்க ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கைகயை பல ஆண்டுகளுக்கு முன்பே அம்மாநில முதல்வரிடம் சமர்ப்பித்தாலும், அதில் இடம்பெற்ற எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனிடையே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஹேமா கமிட்டியின் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: "எங்கெல்லாம் அதர்மம் தலைதூக்குதோ அங்கெல்லாம் வருவான் இந்த அபிமன்யு" - வேதா படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ.!
பாலியல் தொல்லை
அதன்படி, நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவது, அவர்கள் படுக்கைகைக்கு ஒத்துழைத்தால் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது, படுக்கைக்கு ஒத்துழைக்காத நடிகைகளை தனியாக தேர்வு செய்து, அவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக தொல்லை கொடுப்பது போன்ற செயல்கள் நடந்தது அம்பலமானது.
அதேபோல, தங்களின் வலைகளில் நடிகைகளை விழவைக்க முத்தம், நிர்வாணம் போன்ற காட்சிகளை ஏற்படுத்தி, அதன் வாயிலாக நடிகைகளை மிரட்டுவது, கட்டாயப்படுத்துவது போன்றவற்றையும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. பல நடிகைகளும் எதிர்கால பயத்தால் புகார் அளிக்கவில்லை, சிலர் திரையுலகை விட்டு ஒதுங்கிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு பலி விவகாரம்; ரூ.10 இலட்சம் நிதிஉதவி வழங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா.!