மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
48 வயதில் கர்ப்பம்.! கவுண்டமணி பட நடிகை அறிவிப்பு.! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் காமெடி மற்றும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷர்மிலி. இவர் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து 27 படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி செந்தில், வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி, விவேக் ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார்.
நடிகை ஷர்மிலி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த அவர் 40 வயதில் ஐடி துறை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது 48 வயதில் நடிகை ஷர்மிலி தனது முதல் குழந்தைக்காக கர்ப்பமாக உள்ளாராம்.
இந்நிலையில் அவர் அண்மையில் youtube சேனலில் நடிகை வனிதா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர், நான் பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக உள்ளேன். அதனால் மிகவும் கவனமாக இருக்கிறேன். இளம் வயதில் குழந்தையை பெற்றுக் கொண்டிருந்தால் எப்படி வளர்த்திருப்பேன் என தெரியாது.
ஆனால் தற்போது குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனது வாழ்க்கையில் எல்லா விஷயமும் லேட்டாகவே கிடைத்தது. குழந்தையும் அப்படிதான் என கூறியுள்ளார். மேலும் அவர் குழந்தை பிறந்த பிறகு தனது கணவரின் ஆதரவுடன் படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.