ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ஜீ தமிழுக்கு தாவிய விஜய் டிவியின் முக்கிய பிரபலம்.! யார் தெரியுமா? கெத்துக்காட்டும் வீடியோ இதோ!!
தற்காலத்தில் சினிமாக்களை விட தொலைக்காட்சி தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் இப்பொழுது சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர்.
இவ்வாறு தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகளாலும், தொடர்களாலும் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. இதில் பகல் நிலவு என்ற தொடரில் ஸ்நேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷிவானி. அதில் இடையில் வந்து இணைந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்கள் நகர்ந்த நிலையில் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
மேலும் ஆட்டத்தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக முடிவுற்ற நிலையில் நடிகை ஷிவானி விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரிலும் நடிக்க துவங்கினா.ர் ஆனால் ஒரு சில காரணங்களால் தொடரில் தொடராமல் பாதியிலேயே விலகினார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் நடிகை ஷிவானி தற்பொழுது ரசிகர்களிடையே பிரபலமான மற்றொரு தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இரட்டை ரோஜா என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்தநிலையில் இந்த தொடரின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு வைரலாகி வருகிறது.