மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீண்ட இடைவெளிக்கு பிறகு முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை ஸ்ரீதிவ்யா...
குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு சீரியல்களில் நடித்து பின் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதனை தொடர்ந்து அதர்வாவுக்கு ஜோடியாக ஈட்டி, ராணா டகுபதிக்கு ஜோடியாக பெங்களூரு நாட்கள் படத்தில் நடித்துள்ளார்.
பின்னர் ஜிவி பிரகாஷ் உடன் பென்சில், விஷாலுக்கு ஜோடியாக மருது, விஷ்ணு விஷாலுடன் மாவீரன் கிட்டு என ஒரே ஆண்டில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்தார். பின்னர் சில காலம் காணாமல் போன ஸ்ரீதிவ்யா 2017 ஆம் ஆண்டு ஜீவாவுக்கு ஜோடியாக சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு கோலிவுட்டில் படவாய்ப்புகள் இன்றி போட்டோ ஹூட் புகைப்படங்களை மட்டும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரெய்டு படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.