மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. நடிகை சுஜா வருணியின் மகன் எம்புட்டு வளர்ந்துட்டார் பாருங்க.. வைரலாகும் கியூட் பேமிலி புகைப்படம்!
பிக்பாஸ் புகழ் நடிகை சுஜா வருணியின் கியூட் பேமிலி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. என்னதான் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவர் அதிகம் பிரபலமானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம்தான்.
பிக்பாஸ் போட்டியில் தனது விடா முயற்சியினால் சக போட்டியாளர்களுடன் தீவிரமாக போராடி பின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் சுஜா. அதன்பின்னர் நடிகர் சிவாஜி அவர்களின் குடும்பத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரை காதலித்து சுஜா திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிகளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், சமீபத்தில் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம்தற்போது இணையத்தளத்தில் வைரலாகி லைக்ஸ் பெற்று வருகிறது.