மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அவருடனான காதலை மறக்க முடியாமல் தவிக்கிறேன்" நடிகை டாப்ஸியின் வைரல் பேட்டி..
2010ஆம் ஆண்டு "சும்மாண்டி நாதம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி பன்னு. முன்னதாக இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவர் தமிழில் 2011ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய "ஆடுகளம்" படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து வந்தான் வென்றான், வலை, முனி 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்ஸி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் "பிங்க்" திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது.
இதையடுத்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த "சபாஷ் மிது" படத்தில் மிதாலி ராஜாக டாப்ஸி நடித்து அசத்தியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் "அனபெல் சேதுபதி" படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் தான் 9ம் வகுப்பு படித்த போது சீனியர் ஒருவரைக் காதலித்ததாகவும், அவருக்கும் கூட டாப்ஸி மீது ஈர்ப்பு இருந்ததாகவும், திடீரென ஒரு நாள் அவர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி பிரிந்ததாகவும் கூறிய டாப்சிக்கு அதை மறக்கவே பல நாட்கள் ஆனதாம்.