மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் செத்து போய்விடுவேன் என்றுதான் நினைத்தேன்! நடிகை தம்மன்னா கூறிய அதிர்ச்சி தகவல்
கொரோனா வந்ததும் நான் இறந்துபோய்விடுவேன் என்று நினைத்ததாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா சமீபத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவந்தார். தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்றுவரும் அவர் தனது கொரோனா அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், "எனக்கு கொரோனா வந்ததும் நான் செத்து போய்விடுவேன் என்ற எண்ணம்தான் வந்தது. எனக்கு கொரோனா பயம் நிறைய இருந்தது. நிச்சயம் நான் பிழைக்கமாட்டேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் மருத்துவர்கள் என்னை காப்பாற்றிவிட்டார்கள். அந்த கடினமான நேரத்தில் எனது பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்தனர்.
வாழ்க்கை எவ்வளவு விலைமதிக்க முடியாதது என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. கொரோனா வந்து இருப்பவர்களில் அதிகம்பேருக்கு பயத்தில்தான் உயிர் போய்விடுகிறது என்று நினைக்கிறேன். அந்த பீதி இல்லாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். கொரோன பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு குடும்பத்தினர் ஆறுதலாக இருக்கவேண்டும்" என தமன்னா கூறியுள்ளார்.