அடேங்கப்பா! இதுவரை யாருக்காகவும் செய்யாததை வரலட்சுமிக்காக செய்த நடிகர் விஜய்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்க்கார். சர்க்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சர்க்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பியது.
சர்க்கார் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பொதுவாக வரலட்சுமி மிகவும் சுட்டி என்று சொல்வார்கள். அதேபோல சர்க்கார் படப்பிடிப்பு தளங்களிலும் மிகவும் சுட்டியாக இருந்துள்ளார் வரலட்சுமி. படப்பிடிப்பில் கலந்ததில் இருந்து படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சில டப்ஸ்மேஷ் எல்லாம் செய்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
அப்படி யோகி பாபுவை வைத்து அவர் ஒரு வீடியோ போட அதில் விஜய்யின் கை மட்டும் வரும், அதுவும் ரசிகர்களிடம் வைரல். எப்போதும் படப்பிடிப்பில் அமைதியாக இருக்கும் விஜய், வரலட்சுமியுடன் கிம்மிக்ஸ் எல்லாம் செய்வாராம். அந்த புகைப்படங்களை எல்லாம் நான் வெளியிட்டால் விஜய் அவர்கள் என்னை கொன்றுவிடுவார் என கலகலப்பாக சொல்லியிருக்கிறார் வரலட்சுமி.
இதற்கு முன் வேறு எந்த பிரபலங்களும் விஜய்யுடன் கிம்மிக்ஸ் எல்லாம் செய்தோம் என்று கூறியது கிடையாது.