பூவே உனக்காக சீரியலில் இனி இவர்தான் புதிய ஹீரோயின்! யார்னு பார்த்தீர்களா! தீயாய் பரவும் தகவல்!!



actress-varshini-going-to-act-as-heroine-in-poove-unaka

சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் தொடர் பூவே உனக்காக. இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தவர் ராதிகா ப்ரீத்தி. 

அவர் தற்போது பூவே உனக்காக தொடரில் இருந்து விலகியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இதற்கு முன்பு இத்தொடரில் பூவரசியின் தோழியாக நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிகா தொடரில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த அருண் விலகி அவருக்கு பதிலாக தற்போது அசீம் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது புதிய பூவரசியாக நடிக்கவுள்ள நடிகை யார் என்ற குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை வர்ஷினி புதிய பூவரசியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான அக்னி நட்சத்திரம் என்ற தொடரில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.