நடிகை யாஷிகா ஆனந்த் இப்படி சொல்லிட்டாரே! சோகத்தில் ரசிகர்கள்!



Actress yashika said no more adult movies

துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார் யாஷிகா. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் யாஷிகா நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க, நோட்டா படத்தில் வெறும் 3 காட்சிகளில் மட்டும் நடித்துவிட்டு வெளியேறியுள்ளார்.

Yashika anandh

இப்படத்தில், யாஷிகாவிற்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் அதனை வேண்டாம் என்று கூறிவிட்டு பிக் பாஸ்-2 சென்றுள்ளார். அதனால், தான் சிறப்புத் தோற்றத்தில் மட்டும் நடத்த இருக்கிறார்.

யாஷிகா ஆனந்த் இனிமேல், அந்த மாதிரியான படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும். தனது உண்மையான முகத்தை மக்களுக்கு காட்டவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக யாஷிகா தெரிவித்துள்ளார்.