மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிதி சங்கர் நடிக்கும் அடுத்த திரைப்படம் என்ன தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது சங்கர் தான் என்று கூறலாம்.
சங்கர் இயக்கிய திரைப்படங்கள் முதல்வன், இந்தியன், எந்திரன், எந்திரன் 2.0, நண்பன், அந்நியன், சிவாஜி போன்ற பல ஹிட் திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.
தற்போது ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்துள்ளார். இப்படம் பெருந்தளவில் வெற்றி பெறவில்லை. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாய் கூறப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாக உள்ளது.