மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சோர்ந்த விஜய் சேதுபதி! பிரமாண்ட படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி சோர்ந்து நடித்த திரைப்படம் தான் 'நானும் ரவுடி தான்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
அதனை தொடர்ந்து மீண்டும் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி சோர்ந்து நடித்துள்ளனர். தெலுங்கில் சுதந்திர போராட்ட வீரரை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பெயர் சயீரா நரசிம்மா ரெட்டி என வைத்துள்ளனர்.
அது மட்டுமின்றி இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மெயின் ரோலில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக நயன்தாரா ராணி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
மேலும் இப்படத்தை தமிழ் நாட்டில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறார்கள் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.