மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ரஜினியின் மகளின் வீட்டில் திருட்டு.. தொடர் திருட்டு ஏற்படுவதற்கான காரணம் என்ன.! போலீஸ் விசாரணை.?
நடிகர் ரஜினிகாந்தின் மகள்களில் ஒருவரான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு திருட்டு சம்பவம் அரங்கேறியது. இந்த கொள்ளை சம்பவத்தில் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை பார்த்த வேலைக்கார பெண் தான் காரணம் என்று போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இச்சம்பவத்தில் வைரங்கள், 60 சவரன் தங்க நகைகள், பலலட்சம் பணங்கள் போன்றவை காணாமல் சென்றது. இதனையடுத்து அந்த வேலைக்கார பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை போலீசார் நடத்தினர்.
தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு நகைகள் மற்றும் பணங்களை வித்து வீடு வாங்கியதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இச்செய்தி திரையுலகம் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏற்படுத்தியது.
இது போன்ற நிலையில், ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்தின் கார் சாவி தொலைந்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது ரேஞ்ச் ரோவர் காரின் சாவி திடீரென்று மாயமாகிவிட்டது என்று கூறியிருக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்த் புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் திடீரென்று கார் சாவி எப்படி மாயமானது என்பதை குறித்து விசாரித்து வருகின்றனர்.