மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோரதாண்டவமாடும் கொரோனா அச்சுறுத்தலால் சன் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக விலகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பெருமளவில் தவித்து வருகின்றனர். மேலும் கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் வருமானம் இன்றி தவித்து வந்தனர்.
இந்நிலையில் சில தளர்வுகள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கியுள்ள நிலையிலும், வெளிமாநிலங்களில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் பலராலும் சரியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு பதிலாக வேறு நடிகர், நடிகைகள் மாற்றப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அக்னி நட்சத்திரம் தொடரில் அகிலா என்ற வில்லி வேடத்தில் மிகவும் கெத்தாக நடித்திருந்தவர் மெர்சீனா நீனு. அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அக்னி நட்சத்திரம் தொடரில் தான் நடித்த கதாபாத்திரம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையால், ஷூட்டிங்கிற்காக என்னால் சென்னைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தொடர்ந்து என்னால் தொடரில் நடிக்க முடியவில்லை என்றும், தனக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்றும் அறிவித்துள்ளார். மேலும் இதுவரை ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி எனவும் கூறியுள்ளார்.