மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென என்னாச்சு! பயங்கர வில்லியாக மாறிய உலக அழகி நடிகை !! இது தான் காரணமா?
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சரித்திர திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, நயன்தாரா, சத்யராஜ், விஜய்சேதுபதி, அமலாபால் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
மேலும் இத்திரைப்படத்தில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களும் இணைந்து நடிக்க உள்ளனர்.
மேலும் தமிழில் தயாரிக்கப்படும் இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட உள்ளது, இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு பெரிய பழுவேட்டரை என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர்தான் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மணிரத்னம் திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய் மீண்டும் இணைந்து நடிப்பதில் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்