கிடுகிடுவென உயரும் ஐஸ்வர்யா ரஜினியின் சொத்து மதிப்பு.! எவ்வளவு தெரியுமா??



Aishwarya rajini property detail viral

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு தற்போது திரையுலகை கலக்கி வரும் முன்னணி நடிகரான தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18  ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்தனர்.

இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இருவரையும் சேர்ந்து வாழ கூறி பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டைரக்ஷனில் இறங்கிய ஐஸ்வர்யா பயணி என்ற மியூசிக் வீடியோவை மூன்று மொழிகளில் இயக்கி வெளியிட்டுள்ளார்.

aishwarya

மேலும் லாரன்ஸ் நடிப்பில் பாலிவுட் படத்தை நேரடியாக இயக்க உள்ளதாகவும், கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கையை படமாக இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினியின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா தனியாக சம்பாதித்த சொத்து மட்டும் 20ல் இருந்து 30 கோடி வரை என கூறப்படுகிறது.