ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
சத்தமேயின்றி செம சிம்பிளாக நடிகர் அஜித்தின் ஆபீஸில் நடந்த விழா.! இயக்குனர் இவர்தானா?? வெளிவந்த சூப்பர் தகவல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது எனவும், அனிருத் இசையமைக்கிறார் எனவும் தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் மகிழ் திருமேனி ஏகே 62 இயக்கவுள்ளதாகவும் செய்திகள் பரவியது. இவர் இதற்கு முன்பு தடம், மீகாமன், கலகத்தலைவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் ஏகே 62 படத்தின் பூஜை விழா நேற்று நடிகர் அஜித்குமாரின் அலுவலகத்தில் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பூஜை தற்போது முடிந்தாலும் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் எனவும் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.