மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
27 ஆண்டுகளுக்கு பின்பு ரஜினியை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய அஜித்! எதில் தெரியுமா?
பொங்கலை முன்னிட்டு ரஜினி நடித்த பேட்ட திரைப்படமும், அஜித் நடித்த விசுவாசம் திரைப்படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களைத்தான் பெற்றுள்ளது.
இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் நாள் வசூலில் ரஜினியின் பேட்ட படத்த்தை விட அஜித்தின் விஸ்வாசம் படம் தான் அதிகம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் பேட்ட மற்றும் விசுவாசம் படத்தின் முதல்நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 48 கோடியும், தமிழகத்தில் மட்டும் 23 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் விசுவாசம் திரைப்படம் உலகம் முழுவதும் 43 கோடியும், தமிழகத்தில் மட்டும் 26 கோடி வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரஜினியின் 27 ஆண்டுகாள சாதனையை முறியடித்துள்ளார் அஜித். அதாவது கடந்த 27 ஆண்டுகளாக ரஜினியின் படத்துடன் தமிழகத்தில் ஒரே நாளில் வெளியான எந்த படமும் ரஜினியின் படத்தை விட அதிகமாக வசூல் செய்ததில்லையாம். கடைசியாக 27 ஆண்டுகளுக்கு முன்பு 1992ல் வெளியான கமலின் தேவர் மகன் படம் அதே நாளில் வெளியான ரஜினியின் பாண்டியன் படத்தை விட அதிகமான வசூலை பெற்றுள்ளது. இப்போது விஸ்வாசம் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார் அஜித்.