ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
அன்னைக்கு அஜித் சொன்னது இன்னைக்கு விஜய்க்கு செட் ஆகுது..! வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விஜய்யின் வீட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை தமிழகம் முழுவதும் பெரும் பரவலாக பேசப்பட்டது. மாஸ்டர் படப்பிடிப்பை நிறுத்தி, விஜய்யை வீட்டுக்கு அழைத்துவந்து சோதனை செய்தது பெரும் வைரலாக பேசப்பட்டது.
இந்நிலையில் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் கூறிய கருத்து தற்போது வைரலாகிவருகிறது. வீட்டில் வைத்த பொருட்களில் பாதியை எங்கே வைத்தோம் என்பது தெரியாமல் இருந்தது. வருமானவரி சோதனையால் காணாமல் போன பொருட்கள் மீண்டும் கிடைத்துவிட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைகிறேனே தவிர வருமான வரி சோதனை நடைபெற்றது குறித்து எந்த அதிர்ச்சியும் இல்லை என அஜித் கூறியிருந்தார். மேலும், நான் முறை தவறி எதையும் வீட்டில் வைத்திருக்கவில்லை என்றும் அஜித் அதில் குறிப்பிட்டிருந்தார். அன்று அஜித் கூறியது இன்று விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.