மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சு அசல் நடிகர் அஜித் போலவே இருக்கும் நபர்... புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவரை ரசிகர்கள் செல்லமாக தல அஜித் என அழைத்து வருகின்றனர். இவருக்கு என்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இப்படம் இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகர் அஜித் போலவே இருக்கும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் அட என்னப்பா அச்சு அசல் நடிகர் அஜித் போலவே இந்த நபர் இருக்கிறாரே என ஷாக்காகி வருகின்றனர்.