மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திரையுலக வெளிச்சமே இல்லாமல் இருக்கும் நடிகர் அஜித்தின் அம்மா அப்பா புகைப்படம்.! இவங்கதான அது.? வைரலாகும் புகைப்படம்.!
1993 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா இயக்கத்தில் அமராவதி என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தல அஜித். ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவர் தனது பள்ளி படிப்பை பாதியிலையே விட்டுவிட்டு பைக் மெக்கானிக்காக வேலைக்கு சேர்ந்தார்.
அதன்பின்னர் பைக் ரேஸ், சினிமா என தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார் அஜித். இவருக்கென கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் போலீசாக நடித்துவருகிறார் அஜித். சினிமாவில் பிரபலமாக இருக்கும் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அஜித் - ஷாலினி, அவர்களது குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளியாகி வைரலாவது வழக்கம். ஆனால், அஜித்தின் பெற்றோர் புகைப்படம் அவ்வளவாக இணையத்தில் வெளியாகி வைரலானது கிடையாது. இதுவரை பெரிதாக வெளியவராத அஜித்தின் பெற்றோர் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவர்களது புகைப்படம்.