மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடிக்கடி அப்டேட் கேட்ட ரசிகர்கள்.. கடுப்பாகி அஜித் வெளியிட்ட அறிக்கை.. என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
தனது ரசிகர்களிடம் கோரிக்கை வைத்து நடிகர் அஜித் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் படம் வலிமை. கொரோனா ஊரடங்கிற்கு முன் தொடங்கப்பட்ட இந்த படம் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இந்நிலையில் வலிமை படம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளிவராததால், வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொல்லை செய்துவந்தனர். இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியின் போது, பவுண்டரி லயனில் நின்றுகொண்டிருந்த இங்கிலாந்து வீரரிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்டேட் கேட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இப்படி தொடர்ந்து பலவிதங்களில் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டு வரும்நிலையில், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அஜித், "கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்திருக்கும் "வலிமை" படத்தின் அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமடைய செய்கிறது.
முன்னரே தான் அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில், மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீதுள்ள மரியாதையை கூட்டும்.
எனவே ரசிகர்கள் இதனை மனதில் கொண்டு பொது வெளியிலும், சமூகவலைதளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனவும், என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்" எனவும் அஜித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.