மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாரும் அதிகம் பார்த்திராத அஜித் - சந்தானம் ஜெயா டிவி நேர்காணல்.! வைரல் வீடியோ!
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒருவர் தல அஜித். பள்ளி படிப்பை பாதியில் விட்டுவிட்டு, பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து, எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் இன்று புகழின் உச்சத்தில் இருப்பவர்தான் தல அஜித்.
இவருக்கென கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அஜித் படம் வெளியாகப்போகிறது என்றாலே ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாட தொடங்கிவிடுவார்கள். தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துவருகிறார் அஜித். வலிமை படத்தில் அஜித் போலீசாக நடித்துவருவதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்றே கூறலாம்.
இந்நிலையில் 1971 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பிறந்த அஜித் வரும் மே 1 ஆம் தேதி தனது 49 வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதனைமுன்னிட்டு அஜித்தின் பழைய புகைப்படங்கள், வீடியோக்களை அவரது ரசிகர்கள் இனையத்தில் வைரலாக்கிவருகின்றனர்.
அந்த வகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜெயா தொலைக்காட்சியில் நடிகர் சந்தானம் பேட்டி எடுக்க, அஜித் பதில் கூறும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. அந்த பேட்டியில், என்னுடைய தலைமுறை நடிகர்களில் அதிக தோல்வி படங்களை கொடுத்தது நானாகத்தான் இருக்கும் என அஜித் கூற, அவரது இயல்பான பேச்சை பலரும் பாராட்டியுள்ளனர். இதோ அந்த வீடியோ.