மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம கடுப்பில் வனிதாவை வளைத்துக்கட்டும் போட்டியாளர்கள்.! செய்த காரியத்தை பார்த்தீர்களா!! வைரலாகும் வீடியோ!!
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.
கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறினார். அதன்பின்னர் பிக்பாஸ் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கினார் . இந்நிலையில் சேரன் வீட்டில் இருந்து வெளியேறும்போது சக போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தினர்.
லாஷ்லியா சேரனின் கையை பிடித்து கதறி அழுதார். இந்நிலையில் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்து வனிதா நாளுக்கு நாள் பெரும் பூகம்பத்தை கிளப்பி வருகிறார். மேலும் சிறு சிறு பிரச்சினையை கூட அவர் ஊதி பெருசாக்கி வருகிறார். இவர் மீது போட்டியாளர்கள் அனைவருமே செம வெறுப்பில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று போட்டியாளர்கள் அனைவருக்கும் நாமினேஷன் நடைபெற்றுள்ளது. அப்பொழுது தர்சன், முகேன், சாண்டி என அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக சேர்ந்து வனிதாவை நாமினேட் செய்துள்ளனர். இந்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.