மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேறு வழி தெரியலை..பிரேமம் பட இயக்குனர் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு.! அவருக்கு இப்படியொரு பிரச்சினையா??
நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளிவந்த நேரம் படத்தை இயக்கியதன் மூலம் சினிமாதுறையில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். கேரளா மாநிலத்தில் பிறந்த அவர் தொடர்ந்து மலையாளத்தில் பிரேமம் படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னர் அவர் தமிழில் அந்தலாஜி படம் ஒன்றை இயக்கியிருந்தார். மேலும் தமிழ் மொழியில் சாண்டி மற்றும் கோவை சரளா நடிப்பில் உருவாகி இருக்கும் கிப்ட் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் திரையரங்கு படங்களை இயக்கப்போவதில்லை என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், " நான் எனது சினிமா தியேட்டர் கேரியரை நிறுத்துகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ளது. அது நேற்றுதான் எனக்கு தெரியவந்தது. நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆனாலும் பாடல்கள், வீடியோ மற்றும் குறும்படங்கள் அதிகபட்சம் ஓடிடி தொடர்ந்து கொடுப்பேன்.
எனக்கு சினிமாவில் இருந்து விலக விருப்பமில்லை. ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. என்னால் செய்ய முடியாத ஒன்றிற்காக நான் சத்தியம் செய்ய விரும்பவில்லை. உடல் பலவீனமாக இருந்தாலோ, வாழ்க்கை நினைத்தபடி இல்லை என்றாலும் அது வாழ்வில் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.