மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தாடி! மேக்கப் இல்லாமல் நம்ம ராஜாராணி செம்பா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இதில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் ஆல்யா மானசா. மேலும் தொடரில் சாதுவாக மிகவும் குடும்ப பங்காக இருந்த அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே கிளம்பியது.
இந்நிலையில் ஆலியா மற்றும் ராஜாராணி தொடரில் அவருக்கு கணவராக கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ் இருவரும் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர்.
அதனை தொடர்ந்து இருவரும் அவ்வப்போது ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது, விளம்பர படங்களில் நடிப்பது, டப்மாஷ் வீடியோ, புகைப்படங்கள் என மிகவும் ஜாலியாக சுற்றித்திரிந்தனர். பின்னர் யாரும் எதிர்பாராதவிதமாக ஆலியா பிறந்தநாள் அன்று இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளதாக சஞ்சீவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வித்தியாசமான போட்டோஷூட் எடுத்தும், ஜோடியாகவும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆலியா தற்போது விளம்பரம் ஒன்றிற்காக மேக்கப் போடாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.