என்னது! நடிகர் அமலா பால் மறுபடியும் அந்த கெட்டப்பில் நடிக்கிறாரா? அப்போ சூப்பர்தான்!



amala-paul-act-as-police-again-in-web-series

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து அவர் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அமலாபால் விக்ரம், விஜய், தனுஷ் ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து அமலாபால் சினிமாவில் பிஸியாகிவிட்டார். மேலும் அவர்  ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மேலும் பிரபலமானார். 

amala paul

இந்த நிலையில் தற்போது அமலாபால் தெலுங்கில் குடியெடமைதே 
 என்ற வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 8 பகுதிகளை கொண்ட திகில் கதையம்சம்  கொண்ட இந்த வெப் தொடரில் அமலாபால் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளாராம். இந்த தொடரை பவன்குமார் இயக்குகிறார். மேலும் நடிகை அமலாபால் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த தலைவா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.