#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் காதலில் விழுந்த அமலா பால் அமலாபாலின் காதலர் வெளியிட்ட வைரல் வீடியோ..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அமலா பால்.
தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையின் மூலம் தனிக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார். தனது அழகாலும், நடிப்பு திறமையினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் அமலாபால்.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் விவாகரத்தானது. அதன் பின்பு தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருந்து வந்தார் அமலாபால்.
இந்நிலையில், தற்போது அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் என்பவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அமலாபால் அவருக்கு எஸ் சொல்லிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் ரசிகர்கள் அமலா பால் காதலில் விழுந்து விட்டாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.