மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன் அம்மாவின் பிறந்தநாளில் நடிகை அமலா பால் செய்த காரியத்தை பார்த்தீங்களா.! தீயாய் பரவும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். தனது முதல் படத்திலேயே ஏராளமான சர்ச்சைகளை சந்தித்த அவர் பெருமளவில் பிரபலமடையவில்லை. அதனை தொடர்ந்து அவர் மைனா என்ற படத்தில் நடித்தார். இப்படம் நன்கு ஹிட்டானது. பின்னர் அமலா பால் தெய்வ திருமகள், வேட்டை, தலைவா என பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ஒரு சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு நடிகை அமலாபால் தாறுமாறாக கிளாமரில் இறங்கியுள்ளார்.
இதக்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது அம்மாவின் பிறந்தநாளில் மரம் நடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், அம்மாவின் அருகில் இருக்க முடியாவிட்டாலும் அவரது நினைவாக இந்த மரத்தை நடுவதாக தெரிவித்து, பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அமலா பாலின் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.