#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"நான் ஆரோக்யமான மனநிலையில் இல்லை" பேட்டியின் போது கண் கலங்கிய அமலாபால்..
தமிழில் மைனா படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். இவர் இயக்குனர் ஏ. எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் அமலா பால்.
இரண்டு வருடங்கள் எதிலும் கமிட்டாகாமல் இருந்ததாக அமலா பால் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில், "நான் 13 ஆண்டுகளாக நிறைய வேலை செய்தேன். எப்போதும் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்தேன். என் வெற்றியை கொஞ்சமும் கொண்டாடவில்லை.
நான் நிறைய இழந்திருந்தேன். அன்று என்னுடன் யாரும் இல்லை. மைனாவில் இருந்து எல்லாம் மாறிவிட்டது. மன அழுத்தம் தான் என் பிரச்சனையாக இருந்தது. 2020 கொரோனா தொற்றின் போது தான், நான் என்னை உணர்ந்தேன். நான் ஏமாற்றப்பட்டேன் என்று உணர்ந்தேன். மனம் சரியாக இருந்தால் தான் எல்லாமும் சரியாக இருக்கும். எல்லாமே மனதில் தான் இருக்கிறது. இதிலிருந்து மீள வேண்டுமானால், அது என்னால் மட்டுமே முடியும் என்று உணர்ந்தேன்" என்று கூறியிருந்தார்.