மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அமராவதி படத்தில் நடிக்கும் போது இயக்குநர் மிகவும் கஷ்டபடுத்தினார்".. அமராவதி ரீ ரிலிஸ் குறித்து நடிகை சங்கவி உருக்கம்.?
தமிழில் 1993 ஆம் வருடம் வெளியான திரைபடம் 'அமராவதி'. படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகியான அஜித், சங்கவி இருவருக்கும் இதுவே முதல் படமாகும். முதல் படமே மிகபெரிய ஹிட்டாகி இருவரும் மக்கள் மனதை கவர்ந்தனர்.
இதன்படி, அஜித் மற்றும் சங்கவிக்கு இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. இப்படம் திரையிடப்பட்டு இருபது ஆண்டுகளாகியும் அஜித் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற படமாகும். எனவே இப்படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதியன்று புதுபிக்கபட்டு ரீ ரிலிஸ் செய்யபோவதாக கூறுகின்றனர்.
இதுபோன்ற நிலையில், இப்படத்தின் படபிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து 'அமராவதி' படத்தின் கதாநாயகியான சங்கவி பேசிய வீடீயோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சங்கவி, "அமராவதி படம் எனக்கும் அஜித்திற்கும் முதல் படம். இதில் நடிக்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன். இயக்குநர் செல்வா என்னை வைத்து கஷ்டப்பட்டு நடிக்க வைத்துதான் படத்தை இயக்கி முடித்தார். ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களின் படங்கள் மட்டுமே ரீ ரிலிஸ் ஆகும் என்று நினைத்தேன். மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியிருந்தார்.