மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயதில் நடிகர் அமீர்கான் மகளுக்கு நேர்ந்த கொடுமை! முதன்முதலாக அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அமீர் கான். இவருக்கு 1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து ரனா தத்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் 2005 ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் அமீர்கான் மகள் ஐராகான் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், எனது 14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். அந்தச் சூழல் மிகவும் வித்தியாசமாக இருந்தது. என்ன நடந்தது என்று புரிந்து கொள்ளவே எனக்கு ஒரு வருடமானது. அந்த நபர் தெரிந்துதான் அதைச் செய்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. எனது பெற்றோர் என்னை அதிலிருந்து மீட்டனர்.
பின்னர் அதிலிருந்து வெளியே வந்த பின் நான் மோசமாக உணரவில்லை. பயப்படவில்லை. யாரிடமும் இதுகுறித்து பேசவில்லை. இதனை நானே கையாள வேண்டும் என நினைத்தேன்.எனது சிறுவயதிலேயே பெற்றோர்கள் விவாகரத்து செய்ததால் நான் அதிர்ச்சியாகவில்லை. அவர்கள் இணக்கமான முறையிலேயே விவாகரத்து பெற்றனர். மேலும் தற்போது வரை நண்பர்களாக உள்ளனர். எங்களது குடும்பம் உடையவில்லை என கூறியுள்ளார்.