50 வயதில் பிரபல நடிகர் அமீர் கான் எடுத்த திடீர் முடிவு! என்னாச்சு? செம ஷாக்கில் ரசிகர்கள்!!



ameer-khan-releave-from-twitter

பொதுவாகவே திரைப்படங்கள் பலரும் சமூக வலைத்தள பக்கங்களை தொடங்கி அதில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள், லேட்டஸ்ட் படங்கள் குறித்த தகவல்கள் போன்றவற்றை வெளியிடுவர். இந்த நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான் சமூக வலைதளப்பக்கத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அமீர் கான். இவர் படத்திற்காக ரிஸ்க் எடுத்து எதையும் செய்யகூடியவர். இவருக்கு ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரும் சமூக வலைதள பக்கங்களில் இணைந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார். இந்நிலையில் அவர் திடீரென ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்

Ameer khan

 அண்மையில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் திடீரென ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார், இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், எனது பிறந்த நாளுக்கு அனைவரும் வாழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது நன்றி . சமூக வலைத்தளத்தில் இதுதான் எனது கடைசி பதிவு. நான் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.