மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்ராசக்க.. திருமணம் நடக்கும் முன்பே குட் நியூஸ் சொன்ன அமீர் - பாவனி..! குவியும் வாழ்த்துகள்..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் 5-வது சீசனில் கலந்துகொண்ட சீரியல் நடிகை தான் பாவனி. இவர் அந்த நிகழ்ச்சியில் தனது காதல் கணவர் தற்கொலை செய்து உயிரிழந்த விஷயத்தை கூறி மிகவும் வருத்தப்பட்ட நிலையில், சக போட்டியாளர்கள் இவருக்கு ஆறுதல் கூறினர்.
இதனைத் தொடர்ந்து வைல்டு கார்ட் ரவுண்டில் உள்ளே வந்த நடன கலைஞர் அமீர், பாவனிக்கு ஆறுதல் கூறியதோடு நல்ல நண்பராகவும் பழகி வந்தார். இறுதியில் தனது காதலையும் கூறினார். ஆனால், அதனை பாவனி ஏற்றுக்கொள்ளாமல் இருந்துவந்தார். பின் அமீர் - பாவ்னி பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக நடனமாடி டைட்டிலை ஜெயித்தனர்.
மேலும் தனது காதலையும் பாவனி கூறினார். இவர்களது திருமண பேச்சுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அந்த காருடன் அமீர் மற்றும் பாவனி போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.