மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பல கோடியில் படம் எடுத்து என்ன பிரயோஜனம்? இந்த விஷயத்துக்கு கூட வழியில்லை!" நடிகை அம்மு அபிராமி!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அம்மு அபிராமி. இதையடுத்து 2017ம் ஆண்டு என் ஆளோட செருப்பைக் காணோம், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் சிறிய துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து விஜயின் பைரவா படத்தில் ஒரு கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். தொடர்ந்து ராட்சசன், அசுரன் ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இந்த வருடம் வெளியான "பாபா பிளாக் ஷீப்" படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார்.
தற்போது வெளியாகியுள்ள "கண்ணகி" படத்திலும் அம்மு அபிராமி நடித்துள்ளார். இந்நிலையில், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இவர், "பல கோடிகள் போட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால் நடிகைகள் பாத்ரூம் போக கூட வழியில்லை.
சில படங்களில் நடிக்கும்போது உடை மாற்றவும், பாத்ரூம் போகவும் மிகவும் சிரமப்படுகிறேன். வெளியூரில் ஷூட் செய்யும்போது அட்ஜெஸ்ட் செய்து சொல்கிறார்கள். முன்னணி நடிகைகளுக்கு கேரவன் இருக்கிறார். மற்றவர்களும் மனிதர்கள் தானே? ரெடிமேட் டெய்லட் வைக்கலாம் தானே" என்று கேட்டுள்ளார்.