மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடச்சே இவங்க ரொம்ப மோசம்பா.! இயக்குனர்களை வச்சி செய்த அம்மு அபிராமி.!
கண்ணகி திரைப்படத்தில் நடித்திருக்கின்ற அம்மு அபிராமி சமீபத்தில் வழங்கிய ஒரு பேட்டியில் குறைவான பட்ஜெட்டில் படமெடுப்பதாக தெரிவித்து டார்ச்சர் செய்யும் திரைப்பட தயாரிப்பாளர்களையும், அவர்களுக்கு துணை நிற்கும் இயக்குனர்களையும் சாடியிருக்கின்றார். மேலும் நடிகைகளுக்கு ஒரு பாத்ரூம் கூட அரேஞ்ச் பண்ண முடியாத நீயெல்லாம் ஏன் படம் எடுக்குற? என்று நேரடியாக கேட்டிருக்கிறார்.
திரைத்துறைக்கு வந்த புதிதில் சிறிய அளவிலான பட்ஜெட் திரைப்படங்களில் நடித்த அம்மு அபிராமி, பல சமயங்களில் இது போன்ற சூழல்களை தான் சந்தித்ததாக தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, தனக்கு இன்ஸ்பெக்ஷனெல்லாம் வந்திருக்கிறது. நான் மிகவும் அவதிப்பட்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் அம்மு அபிராமி.
மௌனிகா, மறைந்த நடிகர் மயில்சாமி, வித்யா பிரதீப், அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கின்ற கண்ணகி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், இந்த திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, பேட்டியளித்த நடிகை அம்மு அபிராமி பேசியதாவது,பெண்களுக்கு உடை மாற்றுவதற்கு ஒரு இடமிருக்காது என்றும், பாத்ரூம் போக கூட வெளி இடங்களில் வசதி செய்யாமல் அப்படி என்ன இதுக்கு ஷூட்டிங் நடத்தி சம்பாதிக்க நினைக்கிறாங்கனே தெரியல என்றும், எதையாவது வெளிப்படையாக சொன்னால், இவ ரொம்ப திமிரு புடிச்சவ என முத்திரை குத்தி ஒதுக்கி வச்சிடுவாங்க என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த பேட்டியை பார்த்த சமூக வலைதளவாசிகள் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பாத்ரூம் வசதி கூட இருக்கிறதா? இல்லையா? என்பதை நடிகர் சங்கம் பார்ப்பதில்லையா? என்று கேள்வியெழுப்பி வருகிறார்கள்.