நடிகர் ஆனந்தராஜ் தம்பி தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்! அதிரடியாக அவரது அண்ணனையே கைது செய்த போலீசார்!



anandraj-brother-commits-suicide

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராகவும்,  துணை கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஆனந்தராஜ். இவருக்கு 5 தம்பிகள், 2 தங்கைகள் உண்டு. இவர்களில் கடைசி தம்பி கனகசபை. திருமணம் ஆகவில்லை. தனி வீட்டில் வசித்து வந்தார். இவர், வட்டிக்கு பணம் கொடுப்பது மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் ஆனந்தராஜ் குடும்பத்தையே நிலைகுலைய வைத்தது.  இந்நிலையில் கனகசபை உயிரிழப்பதற்கு முன் எழுதிய 4  கடிதம் சிக்கியுள்ளது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்தராஜ் கூறுகையில், கடன் பிரச்சனையால் தனது தம்பி தற்கொலை செய்யவில்லை என்றும் அவரது வீட்டை அபகரிக்கும் வகையில் சிலா் அளித்த மிரட்டலால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

anandraj

தொடர்ந்து கனகசபையின் தற்கொலைக்குப் பின்னால் அரசியல்வாதிகள் யாரும் இருக்கிறார்களா என செய்தியாளர்கள் கேட்டபோது தழுதழுத்த குரலில், அரசியல்வாதிகள் நம்மை விட புத்திசாலிகள் என நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து புதுவை மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தனது சகோதரர் தற்கொலைக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஆனந்தராஜ் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து போலிசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், திடீர் திருப்பமாக கனகசபையின் இன்னொரு அண்ணன் பாஸ்கா் (எ) அண்ணாமலை (56), அவரது மகன் சிவச்சந்திரன் (30) ஆகிய இருவரையும் கைது செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.