மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்க்கார் படத்திற்காக ஆந்திராவில் உள்ள விஜய் ரசிகர்கள் என்ன செய்துள்ளார்கள் தெரியுமா? நீங்களே பாருங்க!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாகா தயாராகிவரும் திரைப்படம் சர்க்கார். நடிகர் விஜயின் சினிமா பயணத்தில் சர்க்கார் திரைப்படம் மிக முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி சர்க்கார் திரைப்படத்தின் இசைவெளியிட்டு விழா நடந்தது. இசையமைப்பாளர் AR ரஹ்மான் இசையில் அணைத்து பாடலாலும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. சிமடங்காரன் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சர்க்கார் திரைப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சர்க்கார் திரைப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. முழுக்க முழுக்க மாஸ் காட்டியுள்ளார் நடிகர் விஜய்.
வரும் தீபாவளிக்கு சர்க்கார் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சர்க்கார் கதை திருட்டு கதை என பிரச்னை போய்க்கொண்டிருப்பதால் எதிர்பார்த்த நேரத்திற்கு படம் வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க நடிகர் விஜயின் ஆந்திரா ரசிகர்கள் சர்க்காரை கொண்ட்டாடும் விதமாக அவர்கள் செய்துள்ள காரியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. சர்க்கார் திரைப்படத்தை விளம்பர படுத்த ஆந்திராவில் ஓடும் பேருந்துகளில் சர்க்கார் பட புகைப்படங்களை ஒட்டி தளபதிக்கு மேலும் மாஸ் காட்டியுள்ளனர்.