மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்தநாள் பார்ட்டியின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்த ஆண்ட்ரியா..
நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும், மேலும் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் உள்ளவர் ஆண்ட்ரியா ஜெரேமியா. தனது 10 வயதில் இருந்து "யங் ஸ்டார்ஸ்" என்ற குழுவில் பாடி வரும் இவர், ஆரம்பத்தில் சினிமாவில் பாடகியாக தான் களமிறங்கினார்.
மேலும் உலகெங்கிலும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வரும் ஆண்ட்ரியா, 2005ம் ஆண்டு "கண்ட நாள் முதல்" திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன் ஆகிய படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். மேலும் ஷங்கரின் அந்நியன் படத்தில் வரும் 'கண்ணும் கண்ணும் நோக்கியா' பாடல் தான் சினிமாவில் இவரது முதல் பாடலாகும்.
தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருக்கும் ஆண்டிரியா, தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பார்ட்டியில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா..