மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிக்கும் அனிகா.! வைரலாகும் போட்டோஸ்!
2010ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த "கத திடருன்னு" என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர். இதையடுத்து 2015ம் ஆண்டு அஜித் மற்றும் அனுஷ்கா நடிப்பில், கெளதம் மேனன் இயக்கிய "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளையும் வென்றுள்ளார்.
மேலும் 2019ம் ஆண்டு அஜித் மட்டும் நயன்தாரா நடித்த "விஸ்வாசம்" படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். ஜூனியர் நயன்தாரா என்று அழைக்கப்படும் இவர் தற்போது கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான "ஓ மை டார்லிங்" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அனிகா. இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து கவர்ச்சிப்புகைப்படங்களை பதிவிட்டு வரும் அனிகா, தற்போது வெள்ளை உடையில் தேவதை போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.