மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிசியான அனிருத்.. இசையமைக்க மறுத்ததால் கடுப்பான சிம்பு.?
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியபின் தன் சிறு வயதிலேயே பல படங்களை நடித்த அசத்தியுள்ளவர் நடிகர் சிம்பு. ஆனால் சில வருடங்களாக அவர்களின் படங்கள் பெரிதும் வெளிவராத நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். உடல் எடை அதிகரித்து சில ஆண்டுகளாக படம் நடிப்பதையே தவிர்த்து வந்தார்.
ஆனால் தன் உடல் எடையை குறைத்து தன் அசாதாரணமான நடிப்பில் அவர் நடித்த படம் "ஈஸ்வரன்". ஆனால் அதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த "மாநாடு" திரைப்படம் பெரிதளவில் மக்களால் ஈர்க்கப்பட்டது. இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் சிம்பு நடித்த "வெந்து தணிந்தது காடு" திரைப்படமும் வெற்றியை சந்தித்தது.
இதையடுத்து "கண்ணும் கண்ணும்" திரைப்படத்தின் இயக்குனர் "தேசிங்கு பெரியசாமி" அவர்கள் இயக்கத்தில் கமலுடன் இணைந்து சிம்பு நடிக்கவிருக்கிறார். அத்திரைப்படத்திற்கு பெரிதளவில் உழைத்து வருகிறார். நீண்ட தலைமுடியும் ஜிம்மில் ஒர்க் அவுட் என பிசியாக உள்ளார் சிம்பு.
மேலும் அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக அனிருத்தை திரைப்பட குழு சந்தித்தபோது அனிருத் தற்போது ஓர் ஆண்டுக்கு தான் பிசியாக இருப்பதாகவும் சிம்புவின் படத்திற்கு இசையமைக்க இயலாது எனவும் கூறினர்.
சிம்புவிக்கும், தனுஷுக்கும் இருக்கும் பிரச்சனையே அனிருத் அவ்வாறு கூறியதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையாகவே இந்தியன் 2, லியோ ஆகிய திரைப்படத்தில் அனிருத் பிசியாக இருப்பதே காரணம் என கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.