அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம்; நடந்தது என்ன? காவல்துறை பரபரப்பு விளக்கம்.!
சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில், 19 வயதுடைய கல்லூரி மாணவி, மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். கன்னியாகுமரியை சொந்த ஊராக கொண்ட மாணவிக்கு, கல்லூரியில் தன்னுடன் பயின்று வரும் மூன்றாம் ஆண்டு மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவ்வப்போது இருவரும் கல்லூரி வளாகத்தில் தனிமை பகுதியில் சந்திக்கொள்வது இயல்பு என கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு, தனிமையில் சந்தித்துள்ளனர். அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், இருவரும் தனிமையில் சந்தித்ததை வீடியோ எடுத்து இருக்கின்றனர். பின் காதலரை தாக்கி அங்கிருந்து அனுப்பிவிட்டு, பெண்ணை மிரட்டி நிர்வாணப்படுத்தி இருக்கின்றனர். வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி மாணவியை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த விஷயம் குறித்து வெளியே கூறினால் வீடியோ வெளியாகும் என மிரட்டியவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சார்பில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: #Breaking: கல்லூரி வளாகத்திலேயே மாணவியை நிர்வாணப்படுத்தி பாலியல் சீண்டல்; காதலருடன் தனிமையில் இருந்தபோது பகீர்.!
இக்குற்ற செயலில் ஈடுபட்டது மாணவர்களோ? வெளிநபர்களா? என விசாரிக்கப்படுகிறது. சிசிடிவி கேமிராவும் ஆய்வு செய்யப்படுகிறது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: கல்லூரி வளாகத்திலேயே மாணவியை நிர்வாணப்படுத்தி பாலியல் சீண்டல்; காதலருடன் தனிமையில் இருந்தபோது பகீர்.!