மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை புல்லட்: அரபிக்குத்து பாடலையடுத்து ‘அரபி’ பட டீசர் ஏற்படுத்திய ட்விஸ்ட்..!
வரலாற்றில் இடம் பெற்ற ஒருவரின் கதையை திரைப்படமாக தயாரித்தால் உலகெங்கிலும் அதற்கு தனி வரவேற்ப்பு கிடைக்கும். அந்த வகையில் இந்திய விடுதலைக்கு அஹிம்சா வழியில் போராடி வெற்றியும் கண்ட மகாத்மா காந்தியின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம், கண்டங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை தாண்டி பெரு வெற்றி பெற்றது.
அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு உலகக் கோப்பைகள் உள்ளிட்ட 3 ஐ.சி.சி கோப்பைகளை வென்ற, உலக கிரிக்கெட் அணிகளின் முதல் கேப்டனாக வரலாறு படைத்த மகேந்திர சிங் தோனியின் வரலாற்றை பதிவு செய்த “டோனி தி அன் டோல்டு ஸ்டோரி” மாபெரும் வரவேற்பை பெற்றதுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘83’ திரைப்படம், கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன் முறையாக 1983 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை உச்சி முகர்ந்த கதையை சொல்லி மாபெறும் வெற்றியடைந்தது. இந்த நிலையில் இரண்டு கைகளும் இல்லாமல் பாரா நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்த விஸ்வாஷின் கதையை கன்னட மொழியில் திரைப்படமாக்கிய “அரபி" திரைப்பட டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படம் தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர், அண்ணாமலை, விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.