மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைவர் படம்னா சும்மாவா! இதுவரை எந்த தமிழ் படமும் படைத்திடாத பெரும் சாதனை! கொண்டாடும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். அண்ணாத்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை நவம்பர் 4 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் அதனை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அண்ணாத்த திரைப்படம் தமிழகம் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் வெளியாக உள்ளது.
அதுமட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கனடா என வெளிநாடுகளிலும் ரிலீசாகிறது. இந்த நிலையில் அண்ணாத்த வெளிநாட்டில் அதிகப்படியான அதாவது 1100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.