மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனாவால் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு! மீண்டும் எப்போது தொடங்குகிறது? தீயாய் பரவும் தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி, இயக்குனர் சிவா கூட்டணியில் இணைந்து உருவாகும் திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ,பிரகாஷ்ராஜ் ,சூரி ,சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்றது. அப்பொழுது அங்கு பணியாற்றிய 4 டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.
ஆனால் இரண்டு மாதங்களாகியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் எப்பொழுது அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது படக்குழு மார்ச் 15ஆம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.