மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமர்சனங்களுக்கு மத்தியிலும் அண்ணாத்த படைத்த பெரும் சாதனை! கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!!
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அண்ணாத்த படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் இயக்குனர் சிவா தான் இதற்கு முன்பு இயக்கிய வேதாளம், வீரம், விசுவாசம் படத்தின் கலவையாக இப்படத்தை உருவாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.
ஆனாலும் அண்ணாத்த ட்ரைலரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரவேற்றனர். மேலும் அண்ணாத்த ட்ரெய்லர் வெளியாகி இரு நாட்களிலேயே 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.