மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவரு இப்போதைக்கு சரி பட்டு வரமாட்டார்... பாலிவுட்டுக்கு தாவிய ஏ.ஆர் முருகதாஸ்.! .!
தமிழ் சினிமாவின் வெற்றிப்படை இயக்குனர்களில் முதன்மையாக இருப்பவர் தீனா முருகதாஸ் என்று அழைக்கப்படும் ஏ. ஆர் முருகதாஸ். தனது முதல் படத்திலேயே அஜித்குமாரையும், இரண்டாவது படத்தில் புரட்சி கலைஞர் விஜயகாந்தையும் இயக்கி மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர்.
இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் அந்தத் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து மிகப்பெரிய வெற்றியும் பெற்றார். அந்த திரைப்படத்திலும் ஏ. ஆர் முருகதாஸ் தான் இயக்குனராகப் பணியாற்றினார். இவர் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஆகியோருடனும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் பணியாற்றுவதாக இருந்தது. சிவா கார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மாவீரன் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இருப்பதால் தீனா முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைய இருக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் தாமதமாக துவங்கும் என தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானுடன் இணைந்து இந்தி படத்தை இயக்க இருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். சல்மான் கான் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் கிக். இது தமிழில் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். தற்போது திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை சல்மான் கானுடன் இணைந்து இயக்க இருக்கிறார் முருகதாஸ்.