மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மரண மாஸாக வெளியான தலைவர் 167 'தர்பார்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்; ரசிகர்கள் உற்சாகம்.!
தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் முருகதாஸ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கி வருகிறார்.
பேட்ட படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் இந்தப் படத்தில ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், இசையமைபபாளராக அனிருத்தும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
Here We Go! #Thalaivar167 #Darbar@rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad pic.twitter.com/cjmy4gQJjy
— Lyca Productions (@LycaProductions) April 9, 2019
ரஜினியின் 2.0 படத்தைத் தயாரித்த லைகா நிறுவனமே இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளது படக்குழு. மேலும் பொங்கலுக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான லைகா நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன் படி இன்று வெளியான முதல் பார்வை போஸ்டரில் படத்திற்கு “தர்பார்” என பெயரிடப்பட்டுள்ளது.